Skip to main content

Posts

காலம்

காலத்தை நீ கண்ணென போற்றினால் காலனின் பிடியில்  இருந்தும்  தப்பலாம். வேண்டும் பொருள் யாவும் கையில் வந்து சேரும். தலைமை தானே உன்னை தேடி வரும். திறமை தானே தன்னுள் இருந்து எழுந்து வரும். வீரம் வரும், சூரம் வரும், கூடிய விரைவில் நல்ல நேரம் வரும். தன் நேரத்தை போற்றும் ஒருவருக்கே! தன்னை தானே பழிக்கும் நிலையோ!!! இல்லை, ஊரார் தன்னை ஏய்க்கும் நிலையோ ஒருக்காலும் தோன்றாது. ஏன்!!! உன் பிறப்பின் நோக்கமே உள்ளங்கை கனி போல உடனே விளங்கிவிடும்.
Recent posts

சிவ தொண்டு

  மனமற்று போதலே ஈசனின் தொண்டு. மற்றவை எல்லாம் மண்மேல் கனநேர விளையாட்டும் விளம்பரமே!!! -- ஜித்து

அறிந்தேன்

அறிந்தேன் என் படைப்பின் நோக்கம். உன் பாதம் பணிவதே அன்றி ஒன்றும் இல்லையே  நான் சாதிக்க  இம்மண்ணில் எனக்கு. போதும் என்றும்  நீ எனக்கு  -- ஜித்து

பொய்க்காது

உலகோர் நம் மீது கொண்ட அன்போ, உலகோர் மீது நாம் கொண்ட அன்போ, ஒரு நாள் பொய்க்கும். பொய்க்க்குமோ  ஈசன் பால் கொண்ட அன்பும், ஈசன் நம் மேல் கொண்ட அன்புமே!!! -- ஜித்து

விரதம்

ஊண் நின்று உணர்வில் கலந்த ஈசனை, நான் நின்று நாளும் ஏத்தும் படிக்கு விரதம் கொண்டேன். முன் செய் நல் வினையோ, ஈசனை நான் கூட உதவியது. எந்தையும் என் தாயும் இனி  நீயே ஈசனே. -- ஜித்து

ஞானம்

  உள்ளம் தெளியும் வரை காத்திரு ஞானம் தோன்றும். பல பிறவிகளில் தொடரும் ஈஸ்வர ஞானம் எப்பிறவியிலும் வெளிப்படலாம். சும்மா இருந்து சுமைகளை தவிர்த்து சுப்பிரமணியன் சொல் படி நிற்க உமையோடு கூடிய உத்தமனை காணலாம் -- ஜித்து