காலத்தை நீ கண்ணென போற்றினால் காலனின் பிடியில் இருந்தும் தப்பலாம். வேண்டும் பொருள் யாவும் கையில் வந்து சேரும். தலைமை தானே உன்னை தேடி வரும். திறமை தானே தன்னுள் இருந்து எழுந்து வரும். வீரம் வரும், சூரம் வரும், கூடிய விரைவில் நல்ல நேரம் வரும். தன் நேரத்தை போற்றும் ஒருவருக்கே! தன்னை தானே பழிக்கும் நிலையோ!!! இல்லை, ஊரார் தன்னை ஏய்க்கும் நிலையோ ஒருக்காலும் தோன்றாது. ஏன்!!! உன் பிறப்பின் நோக்கமே உள்ளங்கை கனி போல உடனே விளங்கிவிடும்.