Skip to main content

அமைதி


நானிலம் ஆளும்

அரசனுக்கும் சந்தோஷம்

கிடைக்கலாம்.


ஆனால்

நாதன் தாள்

சேர்ந்தவற்கே

அமைதி கிடைக்கும்.


ஆயிரம் இன்பம்

தரும் செயலிலும்

ஓர் அமைதி தரும்

செயல் பெரிதே


தன் அடியவர்க்கு

அன்றி

மன அமைதியை

ஒருவற்கும் ஈசன் 

அளிக்க மாட்டான்

பணிமின் அவனை

நற்பேறு சேர!


--

Jithu

Comments

Popular posts from this blog

சிவ தொண்டு

  மனமற்று போதலே ஈசனின் தொண்டு. மற்றவை எல்லாம் மண்மேல் கனநேர விளையாட்டும் விளம்பரமே!!! -- ஜித்து

ஞானம்

  உள்ளம் தெளியும் வரை காத்திரு ஞானம் தோன்றும். பல பிறவிகளில் தொடரும் ஈஸ்வர ஞானம் எப்பிறவியிலும் வெளிப்படலாம். சும்மா இருந்து சுமைகளை தவிர்த்து சுப்பிரமணியன் சொல் படி நிற்க உமையோடு கூடிய உத்தமனை காணலாம் -- ஜித்து

பொய்க்காது

உலகோர் நம் மீது கொண்ட அன்போ, உலகோர் மீது நாம் கொண்ட அன்போ, ஒரு நாள் பொய்க்கும். பொய்க்க்குமோ  ஈசன் பால் கொண்ட அன்பும், ஈசன் நம் மேல் கொண்ட அன்புமே!!! -- ஜித்து